மன்னன் கூரைச்சேலை - சிறைச்சாலை

பெ: மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
கண்ணன் வந்து நேரில் என்னைச் சேரும் நாளில்
என்னுயிரில் மின்னல்தானோ.. இனி பூமழையும் கொஞ்சுந்தேனோ
இள மாப்பிளைக்கு புதுப் பொண்ணும் நான்தானாம்
நல்முத்தே வா வா.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓ..
மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ

பெ.குழு: தனன தீரனன தானன தானா.. தனன தீரனன தானன தானா..
தனன திரனனனன.. தனதிரனா.. தா.. திரனனன நா நா..

பெ: செந்துரப் பொட்டிட்டேன்.. ஒளிப் பொன்வளை கையிலணிந்தேன்
ரெண்டுக்கும் மெத்தைமேல் சிந்த ஆசை
சாமத்தில் பூஜைக்கு உயிர்த் திரியில் விளக்கு கொளுத்தி
நான் வைப்பேன் என் மன்னன் பேரைச் சொல்லி
பிள்ளைச் செல்வம் நூறென்று சொல்லி ஊரும் மெச்சும்தான்
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: நித்தம் பள்ளிப் பாடங்களும் கலைகள் பலவும் தருவேன் நான்
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: நாளும் பொழுதும் உள்ளமிளைத்தேன் என்னைத் தேடி வா
முல்லைக் கொடியும் முள்ளை அள்ளித் தூவும் முன்பே நீ
வள்ளல் போல் கண்ணா வா

பெ: மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ

ஆ: ஏ.. ஹேஹேஹேஹே.. தேனெடுத்து வச்சிருக்கும் தேனீ
ஆ.குழு: ஓஹோ..
ஆ: மறு பெளர்ணமிக்குள் தேன் குடிக்கும் பார் நீ
ஆ.குழு: ஓஹோ..
ஆ: அடி குயில்கள் பாடும் நாள் வந்தா..
ஆ.குழு: அடி குலவைச் சத்தம் கேட்காதா
ஆ: உன் தவிக்கும் துயரம் தீர்க்கதான்
ஆ.குழு: அவன் காலடிச் சத்தம் கேட்காதா

பெ: பட்டாடை மேலெல்லாம் என் மன்னவன் வாசனை உண்டு
நாள்தோறும் நான் வைப்பேன் பொன்விளக்கேற்றி
பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேர்க்கையில் தாவணி வீசி
இனி நாள்தோறும் தாலாட்டும் தாயும் நான்தான்
தீயில் தீரும் மோகங்கள்.. நீரில் தீரா தாகங்கள்
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: கப்பல் கற்பனை வேகம் போய் இன்றே அவருடன் வந்திடுமா
பெ.குழு: உய்யா உய்யா உய்யா உய்யா..
பெ: உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி ஒய்வுங் கொள்ளட்டும்
முத்தம் பதித்தவன் நெஞ்சில் நானே மெத்தையிடும் நாள்தான் தாகங்கள் பூச்சுடும்

பெ: மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ
இள மாப்பிளைக்கு புதுப் பொண்ணும் நான்தானாம்
நல்முத்தே வா வா.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓஓ ஓ.. ஓஓஓ..
மன்னன் கூரைச்சேலை.. மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள்தான் கைகூடாதோ.. சிறைக்கதவுகள்தான் தாழ்திறவாதோ

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

Post a Comment

Supported by UCE Academy | Kumari Info | Kavi Pulavar | Music Zone | Shopping Zone | Drivers Zone