சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே - சிறைச்சாலை

ஆ: சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி

நிலவைப் பொட்டு வைத்து பவழப் பட்டும்
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்.. வரவேற்பேன் நான்..
ஆ.குழு: சித்திரப் பூவே.. பக்கம் வர சிந்திக்கலாமா
மன்னனை இங்கே தள்ளி வைத்துத் தண்டிக்கலாமா
ஆ: சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

பெ.குழு: ஓ.. ஓஓஓ.. ஓ.. ஓஓஓ.. ஓஓஓ..
ஓஓஓ.. ஓஓஓ..

ஆ: உனது பெயரை மந்திரம் என ஓதுவேன் ஓதுவேன்
பெ: மின்மினிகளில் நம் நிலவினைத் தேடுவேன் தேடுவேன்

ஆ: சந்தங்களில் நனையுதே மெளனங்கள் தாகமாய்
பெ: மன்னன் முகம் தோன்றி வரும் கண்ணிலே தீபமாய்
ஆ: என்றும் உனை நான் பாடுவேன் கீதாஞ்சலியாய்
உயிரே உயிரே.. பிரியமே.. சகி....

பெ: நநநநநந நாநநநா.. நாநநநா நாநா..
ஆ: நநநநநந நாநநநா.. நாநநநா நாநா..
பெ: சுட்டும் சுடர்விழி நாள் முழுதும் தூங்கலையே கண்ணா
ஆ: தங்க நிலவுக்கு ஆரிரரோ பாட வந்தேன் கண்ணே

பெ.குழு: ஓ.. ஓஓ ஓ.. ஓ.. ஓஹொஹோ.. ஓ.. ஹொஹொஹோ..
ஓஹொஹோ.. ஓஹொஹோ.. ஓ..

பெ: இரு விழிகளில் உயிர் வழியுது ஊமையாய் ஊமையாய்
ஆ: முள் மடியினில் மலர் விழுந்தது சோகமாய் சோகமாய்

பெ: விண்ணுலகம் எரியுதே.. பெளர்ணமி தாங்குமா
ஆ: இன்று எந்தன் சூரியன் காலையில் தூங்குமோ
பெ: கனவில் உனை நான் சேர்ந்திட இமையே தடையா
விரிந்தால் சிறகே இங்கு சிலுவையா

ஆ: சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
நிலவைப் பொட்டு வைத்து பவழப் பட்டும்
அருகில் நிற்கும் உன்னை வரவேற்பேன் நான்.. வரவேற்பேன் நான்..
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி
சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே தூண்டிலிடும் தேவி
கத்தும் கடலலை தாண்டி வந்தும் தீண்டுது உன் ஆவி

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எம்.ஜி.ஶ்ரீகுமார் & சித்ரா

Post a Comment

Supported by UCE Academy | Kumari Info | Kavi Pulavar | Music Zone | Shopping Zone | Drivers Zone