இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
பெ: கண்ணால தானே.. இந்த காதல் வளருது.. இந்த காதல் வளருது
ஆ: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
பெ: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
ஆ&பெ: ஹோ..
ஆ: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
...
ஆ: மூடி வச்ச மொட்டுப் பூவுக்குள்ள வண்டு வந்தா வழி கிடைக்குமா
பெ: வண்டின் இதழ் மொட்டில் பட்டு விட்டால்
மொட்டின் இதழ் விட்டுக் கொடுக்குமே
ஆ: ஓ.. பூனைக்கு மணியைக் கட்டுறது யாரு
பெ: இப்படியே இருந்தா முடிவென்ன கூறு
ஆ: பெண்ணின் மன ஆழம்..
அறிந்துடும் முன்னே இறங்கிட எனக்கும் தயக்கம்
பெ: காந்தமதைக் கண்டா..
இரும்பது தானே இணைந்திட வருவது வழக்கம்.. ஹா.. ஹா..
ஆ: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது
பெ: இந்த மனசு தவிக்குது
...
ஆ: தினம் தினம் உன்னைப் பார்க்கையில
மனம் விட்டுப் பேசத் துடிக்கிறேன்
பெ: ஊரு கதை தானே நடக்குது.. உள்ள கதை உள்ளே முழிக்குது
ஆ: பார்க்க வரும் முன்னே துணிவது இருக்கும்
பெ: பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும்
ஆ: சிப்பிக்குள்ள முத்தைப் போல..
நெஞ்சுக்குள்ள காதலை மூடி மூடி வைப்பதும் ஏனோ
பெ: தொண்டைக்குழி வரைக்கும்..
அலையுது வார்த்தையும்.. வந்து வந்து திரும்புது ஏனோ.. ஹோ.. ஹோ..
ஆ: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
பெ: கண்ணால தானே.. இந்த காதல் வளருது.. இந்த காதல் வளருது
ஆ: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
பெ: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
ஆ&பெ: ஹோ..
ஆ: சொல்லாமத்தானே..
ஆ&பெ: இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
Post a Comment