ஒத்தயில நின்னதென்ன - வனஜா கிரிஜா

ஒத்தயில நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
ம்கும்கும்..ம்..
ஒத்தயில நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
உங்க வழித்துணைக்கு நானும் வரவா
உங்க வாய்த்துணைக்குப் பேச்சுத் தரவா
இந்தக் கன்னிப் பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப் போடுங்க
ஒத்தயில நின்னதென்hahன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன

சாலையில ஆடுது சாமி வச்ச பூமரம்
உம் பேரத்தான் பாடுது அம்மன் கோயில் கோபுரம்
வானம் பார்த்து நிக்காமலே வளர்ந்த பயிரு யாராலய்யா
வாய்க்கா நீரு வத்தாமலே ஓடி வருது உன்னாலய்யா
இங்கு எல்லாமே நீதானய்யா.. நீ இல்லாம ஊரேதய்யா
ஒத்தயில நின்னதென்hahன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன

ஏறெடுத்து பார்த்துட்டா ஏவல் செய்ய ஆள் வரும்
கண்ணசைச்சுக் காட்டிட்டா கையக் கட்டி ஊர் வரும்
உங்க பக்கம் நானும் வர என்ன தவம் செஞ்சேனய்யா
ஒட்டுறவா நானிருப்பேன்.. இட்ட பணி செய்வேனய்யா
உந்தன் துணையாக நானில்லையா.. இனி தனியாக நீயில்லைய்யா

ஒத்தயில நின்னதென்னhah என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
உங்க வழித்துணைக்கு நானும் வரவா
உங்க வாய்த்துணைக்குப் பேச்சுத் தரவா
இந்தக் கன்னிப் பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப் போடுங்க
ஒத்தயில நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

Post a Comment

Supported by UCE Academy | Kumari Info | Kavi Pulavar | Music Zone | Shopping Zone | Drivers Zone