இந்திர லோகத்து சுந்தரி - உயிருள்ளவரை உஷா

படம்: உயிருள்ளவரை உஷா
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சசிரேகா

பெ: ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்
ஆ: இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
ரதியென்பேன்.. மதியென்பேன்.. கிளியென்பேன்.. நீ வா..
உடலென்பேன்.. உயிரென்பேன்.. உறவென்பேன்.. நீ வா..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
...

ஆ: தென்றலதன் விலாசத்தைத் தன் தோற்றமதில் பெற்று வந்தவள்
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்
முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள்
சிந்து பைரவியைச் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்
பாவை புருவத்தை வளைப்பதே புது விதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பாவை புருவத்தை வளைப்பதே புது விதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பெ: லாலாலலா.. லாலாலலா.. லாலாலலா.. லாலாலலா..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தேனோ
ஆ: ம்..
பெ: மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றேனோ
ஆ: ம் ம்ம்ம்..
...

ஆ: கலைமகள் ஆடினால் சலங்கைகள் குலுங்கினால்
மின்னும் விழியை நல்ல வைரம் கண்டது
நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது
கருவிழி உருளுது.. கவிதைகள் மலருது
பாதங்கள் அசையுது.. பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா நடக்குது
தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு
பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்
இந்த மானிடனும் மயங்கி விட்டான்.. அந்த மானிடமே மனதை விட்டான்
அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்
பாண்டியப் பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்களிதழோரம்.. ஹா..
பாவை இதழது சிவப்பெனும்போது.. ihikhik பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது
பாவை இதழது சிவப்பெனும்போது.. பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது
பெ: லாலாலலா..
ஆ: ஆஹா..
பெ: லாலாலலா..
ஆ: ஓஹோ..
பெ: லாலாலலா..
ஆ: ஏஹே..
பெ: லாலாலலா..
ஆ: ஆ..

பெ: இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தேனோ
ஆ: ம்ஹும் ம்ம்ம்..
பெ: மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றேனோ
ஆ: ஓ.. ரதியென்பேன்.. மதியென்பேன்.. கிளியென்பேன்.. நீ வா..
உடலென்பேன்.. உயிரென்பேன்.. உறவென்பேன்.. நீ வா..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ

Post a Comment

Supported by UCE Academy | Kumari Info | Kavi Pulavar | Music Zone | Shopping Zone | Drivers Zone