ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ..
ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ..
உதய கீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன்.. ஒலிகளில் பூத்தொடுப்பேன்
உலகமெல்லாம் மறந்து போகும்.. மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே..
உதய கீதம் பாடுவேன்.. உதய கீதம் பாடுவேன்
பிள்ளை நாளை பார்க்குமே.. எனை எங்கே என்று கேட்குமே
கண்கள் நீரை வார்க்குமே.. அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே
தோளில் மாலை மாலையில்.. தூக்கு மேடை காலையில்
அழுகின்ற உள்ளங்களே.. வாழ்க வாழ்கவே..
உதய கீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்.. மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே..
உதய கீதம் பாடுவேன்.. உதய கீதம் பாடுவேன்
கண்ணே.. தீரும் சோதனை.. இரு கண்ணில் என்ன வேதனை
தந்தேன் எந்தன் ஜீவனை.. என் சாவில் கூட சாதனை
நாளை நானும் போகிறேன்.. உன்னில் நானே வாழ்கிறேன்
பூப்போன்ற உள்ளங்களே.. வாழ்க வாழ்கவே..
உதய கீதம் பாடுவேன்.. உயிர்களை நான் தொடுவேன்
உலகமெல்லாம் மறந்து போகும்.. மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே..
உதய கீதம் பாடுவேன்.. உதய கீதம் பாடுவேன்
படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Post a Comment