லாலா லாலா லாலா.. லாலா லாலலா..
காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கள்ளூருதே.. தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா.. காமன் உன் வேலையா
வெள்ளை நிலா வானில் வந்தால் வீதி எல்லாம் பொன்னாகும்
கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய்.. கந்தல் மனம் என்னாகும்
ஆதாமிடம் ஏவாளும் அள்ளித் தந்தாள் எந்நாளும்
இன்னும் மிச்சம் ஏராளம்.. எங்கே உந்தன் தாராளம்
கண்கள் ரெண்டும் காமன் குளம்
இந்தக் காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
ஜப்பான் என்னும் தேசத்திலே பகல் பொழுதும் ராத்திரிதான் கோதை இவள் கூட வந்தால் கோப்பைக்குள்ளே யாத்திரைதான்
வெட்கம் இன்று தீராதா.. முத்தம் சுதி சேராதா
அச்சம் என்னும் கடல் தாண்டிப் பெண்மை கரை ஏறாதா
முன்னும் பின்னும் இல்லாததா
அட காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கள்ளூருதே.. தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா.. காமன் உன் வேலையா
படம்: ஜப்பானில் கல்யாணராமன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா
Post a Comment