அடி நாம் புடிச்ச கிளியே - ராசுக்குட்டி

பெ.குழு: ஏஹே.. ஏஏ ஏஹே.. ஏஏ ஏஹே..
தந்தானத் தான தந்தானத் தான தந்தானத் தந்தானத் தானனா..
ஆ: அடி நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி

ஆ: கட்டுக் கட்டா புத்தகத்தை சுமக்கவில்லை நானடி
ஆனாலுந்தான் கெட்ட வழி போனதில்லை நானடி
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள ஆளு நானடி
என்னைப் பத்தி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி
படிப்பு ஒண்ணே வாழ்க்கையா.. பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்த மேதை இல்லையா
உன்னைக் கண் போலத்தான் வச்சுக் காப்பேனடி
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்

ஆ: நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி

ஆ: ஊருக்குள்ள நூறு பொண்ணு என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சி உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர் வரிசை கேட்கவில்லை நானடி
ஆசப்பட்ட பாவத்துக்கு அல்லி தர்பார் ஏனடி
மயக்கம் என்ன பூங்கொடி.. மாமன் தோளை சேரடி
நடந்ததெல்லாம் கனவென மறந்து மாலை சூடலாம்
உன்னைக் கண் போலத்தான் வச்சுக் காப்பேனடி
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்

ஆ: நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி
ஒண்ணு நீயாத் திருந்து.. இல்லை தாரேன் மருந்து
அடி உன்னைத்தான் நினைச்சேன்.. உன்னையே மணப்பேன்
நாம்புடிச்ச கிளியே.. வாசமலர்க் கொடியே.. எம்மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டுத் வெளியே வந்ததென்ன தனியே.. தேகமெங்கும் கொதிக்குதடி

படம்: ராசுக்குட்டி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Post a Comment

Supported by UCE Academy | Kumari Info | Kavi Pulavar | Music Zone | Shopping Zone | Drivers Zone