பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
ஆ: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
ஆ: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
ஆ: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
ஆ: பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
பெ: ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
ஆ: கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சு காதலே
பெ: கறை மாற்றி நாமும் மெல்லக் கரையேற வேண்டுமே
ஆ: நாளை வரும் காலம் நம்மைக் கொண்டாடுமே
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
ஆ: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
பெ: சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
ஆ: வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவமென்பதா
பெ: வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
ஆ: வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
பெ: வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே
ஆ: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
ஆ: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
ஆ: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
ஆ: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
Post a Comment